மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி.

மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி.
X
ஆனங்கூர் அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி. மற்றொருவருக்கு கால் முறிவு.
பரமத்தி வேலூர்,பிப்.11: பரமத்தி வேலூர் தாலுகா  குன்னத்தூர் அருகே சாமிநாத்புரம் மந்த மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் - சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (50). இவரது மகன் சௌந்தரராஜன் (26) கூலி தொழிலாளி. இவரும் பிலிக்கல்பாளையம் அருகே சின்னாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (45) என்பவரது மகன் கவின் (22) கூலி தொழிலாளி இருவரும் பரமத்திவேலூர் ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் ஜேடர்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சௌந்தரராஜன் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் கவின் அமர்ந்திருந்தார். ஆனங்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி சாலையின் இடதுபுறமாக இருந்த மின் கம்பத்தில் பலமாக மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சௌந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவினுக்கு காலில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன அங்கு கவினுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சௌந்தரராஜன் உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு  அனுப்பி வைத்து விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story