சேந்தமங்கலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி
சிறுமி வசிக்கும் பகுதியில் சுகாதாரத்துறையினர் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த துத்திக்குளம் ரெட்டிபுதூர் காலனியைச் சேர்ந்த அருள்பாண்டியன், விண்விழி தம்பதியரின் மகள் லிதியா ( வயது 12), காளப்பநாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு படித்து வந்தார். லிதியாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்துள்ளது.இதனையடுத்து சிறுமியை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி லிதியா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறுமி வசித்து வந்த பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டதோடு, கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்
Next Story




