காளியம்மன் கோவிலில் புதிய விழாக்குழு அமைக்க வி.எச்.பி. சார்பில் கலெக்டர், எஸ்.பி. க்கு நேரில் கோரிக்கை

காளியம்மன் கோவிலில் புதிய விழாக்குழு அமைக்க வி.எச்.பி. சார்பில் கலெக்டர், எஸ்.பி. க்கு நேரில் கோரிக்கை
X
குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா குழுவினை மாற்ற வேண்டி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட பலருக்கு நேரில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா குழுவினை மாற்ற வேண்டி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட பலருக்கு நேரில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: குமாரபாளையம் நகரில் மாசி மாதம் அனைத்து மாரியம்மன் காளியம்மன் மற்றும் கிராமத்து தெய்வங்களுக்கு திருவிழா நடப்பது வழக்கம். அரசு பொறுப்பில் உள்ள கோவில்களில் சமூக நீதியை கடைப்பிடிக்காமல் திராவிட கட்சி, தி.மு.க.வை சேர்ந்த நகர செயலர், நகர பொறுப்பாளர்களை மட்டுமே கமிட்டி நிர்வாகிகளாக போட்டு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு குழப்பங்களும், குளறுபடிகளும், அராஜக போக்கும் ஏற்படும். இதனால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களும், உபயதாரர்களும், மற்ற கட்சியினர், மற்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் தனது உரிமையை இழக்க நேரிடும். அது மட்டும் இல்லாமல், கோவிலில் வரவு செலவு கணக்கானது இன்று வரை எந்த அறங்காவலர் குழுவும் முறையாக பின்பற்றவில்லை. இது போன்ற நபர்களை அகற்றிவிட்டு, உண்மையில் இறைவனுக்கு சேவை செய்யும் ஆன்மீக அடியார்களையும், அனுபவம் மிக்க இறை தொண்டர்களையும் நியமனம் செய்ய வேண்டும். இப்போது உள்ள விழாக்குழுவினை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிடில் திருவிழாவில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்து முன்னணி நகர தலைவர் பாலாஜி, வி.எச்.பி. நகர தலைவர் சுகுமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story