மாநில அளவிலான கைபந்து போட்டியில் விளையாட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைபந்து பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களுக்கு விளையாட்டு உபரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பட்டணத்தில் நடந்தது

X
Rasipuram King 24x7 |11 Feb 2026 8:44 PM ISTமாநில அளவிலான கைபந்து போட்டியில் விளையாட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைபந்து பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களுக்கு விளையாட்டு உபரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பட்டணத்தில் நடந்தது
திருவாருரில் மாநில அளவிலான தழிழ்நாடு கைபந்து கழகத்தின் சார்பில் மாநில அளவிலான கைபந்து யூத் சேம்பியன் ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங் களிலிருந்து அணிகள் தேர்வு செய்யபட்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட கைபந்து கழகத்தின் சார்பிலும் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பார்க்கவன் கைபந்து மைதானத்தில் 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 30பேர் பயிற்சி பெற்றனர். இதில் ஆண்கள் பிரிவில் 14பேரும் பெண்கள் பிரிவீல் 14 பேர் என 28 பேர் தேர்ச்சி பெற்று திருவாருரில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு சீருடைகளை விஜியன், மற்றும் ஜெகன் இலவசமாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பட்டணம் துணைத் தலைவர் பொன்.நல்லதம்பி, பள்ளி நிர்வாகி சக்திவேல், பார்க்கவன் கை பந்து குழு தலைவர் அறிவழகன், பொருளாளர் தம்பிதுரை கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டியில் வெற்றிபெற நாமக்கல் மாவட்ட கைபந்து கழக செயலாளர் வாழ்த்து தெரிவித்தார் பயிற்சியளித்த கார்மேகம் மற்றும் கனராஜ் அவர்களுக்கு விளையாட்டு வீரர்கள் நன்றி தெரித்தனர் என்பது குறிப்பிதக்கது...
Next Story
