ராணிப்பேட்டை, ஜன. 02 : இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை, ஜன. 02 : இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
X
இந்நிலையில், விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனை தேமுதிகவினர் குருபூஜையாக கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
ராணிப்பேட்டை, ஜன. 02 : இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும், அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தவருமான விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மறைந்தார். இவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அந்த அலுவலகம் “கேப்டன் இல்லம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனை தேமுதிகவினர் குருபூஜையாக கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்விற்கு ராணிப்பேட்டை நகர அவைத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நகர துணைச் செயலாளர் இமானுவேல் ராஜன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் எஸ். முத்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஆர். பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதில் நகர நிர்வாகிகள் அமித் பாஷா, மேகநாதன், ஆற்காடு நகர மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள், கே.கே. பிரபு – ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர், தங்கமணி – மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர், கே. முருகன் – வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர், பூபாலன் – குடிமல்லூர், வேலூர கணபதி – 8 ஆவது வார்டு, வேலு கிருஷ்ணன் – 16 ஆவது வார்டு, ஜான் வெஸ்லி , ரோகின்த், விமல்ராஜ், சரண்ராஜ், மகளிர் அணியைச் சார்ந்த எலன்மார்கிரேட், ஆறாவது வட்ட செயலாளர் சரவணன், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி நகர செயலாளர் பாக்யராஜ் தேமுதிக நகர, ஒன்றிய, கிளைக் கழகச் செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story