மார்ச்-08, திருச்சியில் நடைபெறும் மண்டல மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Perambalur King 24x7 |29 Jan 2026 1:48 PM ISTபெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் - பெரம்பலூர் தொகுதி பொறுப்பாளர் தங்க.சித்தார்த்தன் கலந்து கொண்டனர்!
பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் - பெரம்பலூர் தொகுதி பொறுப்பாளர் தங்க.சித்தார்த்தன் கலந்து கொண்டனர்! பெரம்பலூர்- பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்க.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், அரும்பாவூர் பேரூர் கழகச் செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூர் கழகச் செயலாளர் செல்வலெட்சுமி சேகர்,லெப்பைக்குடிக்காடு பேரூர் கழகச் செயலாளர் ஏ.எஸ்.ஜாகிர்உசேன், குரும்பலூர் பேரூர் கழகச் செயலாளர் எம்.வெங்கடேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வ.சுப்ரமணியன், டி.ஆர்.சிவசங்கர், மா.பிரபாகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட விவசாய கூலித் தொழிலாளர் அணி அமைப்பாளர் சி.காட்டுராசா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காடூர்.கவியரசு, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி அமைப்பாளர் அருண்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.இரமேஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜி.கே.மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது! பெரம்பலூர் மாவட்டத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, ''தமிழ்நாடு வெல்லும்'' எனும் தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவது எனவும், பிப்ரவரி-01 முதல் மகளிர் அணி சார்பில் "வெல்லும் தமிழ்நாடு'' பிரச்சாரத்தை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பாக நடத்துவது எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள BLA2,BDA முகவர்களுக்கான பட்டியலை உடனடியாக வழங்குமாறு நிர்வாகிகளை கேட்டுக்கொள்வது எனவும், கடந்த 26-ஆம் தேதி வெல்லும் பெண்கள் டெல்டா மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தும், மார்ச்-08, திருச்சியில் நடைபெறும் மண்டல மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story


