பள்ளி வாகனம் மோதி 1-ம் வகுப்பு மாணவர் படுகாயம்

பள்ளி வாகனம் மோதி 1-ம் வகுப்பு மாணவர் படுகாயம்
X
புதுக்கடை
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே முக்காடு பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் மனைவி சிந்தியா (36). இவர் அந்த பகுதியில் பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவரது மகன் யுவ ரகஷன் (7) இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு  சென்று விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.         நேற்று காலையில் பள்ளி வாகனத்தில் சென்றவர் மாலையில் அதே வாகனத்தில்  வந்து வீட்டு பக்கத்தில் வந்து இறங்கி உள்ளார். டிரைவர் வாகனத்தை நிறுத்தி மாணவர் இறங்கிய பின் தவறுதலாக வாகனத்தை இயக்கியுள்ளார்.       இதில் மாணவன் மீது பள்ளி வாகனம் மோதி, மாணவன் காலில் சர்க்கரம்  ஏறி படுகாயம் அடைந்தார்.  உடனடியாக அவரை மீட்டு காஞ்சிர கோடு பகுதியில் உள்ள தனியார்  ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வாகன டிரைவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story