திண்டிவனம் சார்பதிவாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு

திண்டிவனம் சார்பதிவாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு
கணக்கில் வராத பணம் சிக்கிய விவகாரம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேட்டில் உள்ள மாவட்ட இணை சார்பதிவாளர் அலுவலகம், திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகம், அவரப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங் களில் நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர், அப்போது திண்டிவனம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஒருவர், தான் வைத்திருந்த பையை ஜன்னல் வழியாக வெளியே வீசினார். அந்த பையை கைப்பற்றி திறந்து பார்த்ததில் அதனுள் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 4 பவுன் நகைகள் இருந்தது. தொடர்ந்து, அந்த அலுவல கத்தில் போலீசார் நடத்திய சோதனையின் முடி வில் கணக்கில் வராத மொத்தம் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். போலீ சாரின் விசாரணையில், ஆவண பதிவு செய்ய வந்தவர்களிடம் இருந்து இந்த பணத்தை அதிகா ரிகள் லஞ்சமாக பெற்றிருப்பது தெரியவந்தது, இதையடுத்து சார்பதிவாளரான காஞ்சீபுரத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் திண்டிவனம் பகுதியை சேர்ந்த டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் கவுரி, ஆவண எழுத்தர்கள் கேசவன், வேலன், ஜாகிர் உசேன், ஜெய்னுலாப்தீன், இடைத்தரகர்கள் ரகு பதி, சந்திரன், தனிநபர்கள் அப்துல்மஜித், ராஜா ஆகிய 10 பேர் மீது நேற்று லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story