படியூர் அருகே சூட்கேஸில் விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் இளைஞர் கைது

காங்கேயம் படியூர் அருகே சூட்கேஸில் விற்பனைக்காக வைத்திருந்த 10-கிலோ  கஞ்சா பறிமுதல். வாலிபரை கைது செய்த தாராபுரம் மதுவிலக்கு போலீசார் 
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம்-திருப்பூர் சாலையில் உள்ள படியூர் அருகே, மர்ம நபர் ஒருவர் சூட்கேசில் வைத்து கஞ்சா விற்பதாக எடுத்து வரப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, விரைந்து சென்ற தாராபுரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்பட்டு அங்கு நின்று கொண்டிருந்த நபரை விசாரித்தபோது முன்னுக்குப் பின்  முரணாக பதில் அளித்ததை அடுத்து அந்த நபரை தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த மதுவிலக்கு பிரிவு விசாரணை நடத்தியதில் சேலம் தம்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் (31) தற்போது திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருவதாகவும் ஆந்திர மாநிலத்தில் இருந்து 10-கிலோ கஞ்சாவை வாங்கி வந்து காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சூட்கேஸில் வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து ஹானஸ்ட் ராஜை கைது செய்து அவரிடம் இருந்து சூட்கேசி கைப்பற்றி அதிலிருந்த 10-கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த தாராபுரம் மதுவிலக்கு போலீசார் ஹானஸ்ட் ராஜ்  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story