கோவை டாஸ்மார்க் பணியாளர் குடும்ப மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி ஊக்கத்தொகை !

X
கோவை டாஸ்மார்க் பணியாளர் குடும்பங்களைச் சேர்ந்த 160 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.10 லட்சம் கல்வி ஊக்கத்தொகை நேற்று வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழக பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், 2004–2005 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை கிராஸ்கட் ரோட்டிலுள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் டாஸ்மார்க் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் ராக்கி முத்து தலைமையில, திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேஷ், தொழிலாளர் அணி துணைச் செயலாளர் எல்.பி.எப் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர்.
Next Story

