காந்தி ஜெயந்தி தினத்தன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை – கோவையில் 10 பார்கள் சீல் !

கோவையில் 10 பார்களுக்கு சீல் – மறைமுக மது விற்பனை கண்டறியப்பட்டது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவின்படி மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 10 மதுபான பார்களில் மறைமுகமாக மது விற்பனை நடந்தது. காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் நடைபெற்ற சோதனையில் பேரூரில் 4, கருமத்தம்பட்டியில் 3, பெரியநாயக்கன்பாளையம், வால்பாறை, மேட்டுப்பாளையம் தலா ஒன்றாக மொத்தம் 10 பார்கள் சீல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
Next Story