திருச்செங்கோடு அடுத்த சின்ன கோட்டப்பாளையம் பகுதியில் கோர்ட் உத்தரவுப்படி ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு 10 அடி அகலம் கொண்ட அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு அகற்றம்
Tiruchengode King 24x7 |7 Jan 2026 7:33 PM ISTதிருச்செங்கோடு தாலுகா சின்ன கோட்டப் பாளையம் பகுதியில் தாழ்த்தப் பட்ட மக்கள் மற்றும் பொதுமக்கள்,மர வள்ளி கிழங்கு தோட்டங்களுக்கு கிழங்கு லோடு ஏற்ற லாரிகள் செல்ல முடியாதபடி செல்லும் வழியை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 அடி அகல அரசு புறம்போக்கு நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் திருமங்கலம் கிராமம் சின்ன கோட்டப்பாளையம் பகுதியில் வசித்து வரும் ரவி 58 மற்றும் அவரது மகன் நவீன் குமார் 30ஆகியோருக்கு சொந்தமான சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலம் உள்ளது.இவரது நிலத்தை ஒட்டிஇளையான் குட்டையான் காடு வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு செல்லும் சாலையில் 10 அடி அகலத்திற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் எனவும் அந்த ஆக்கிரமிப்பு அகற்றி தர வேண்டும் மற்றும் ஒரு இட்டேரிவழியாக சென்று தான் அந்தப் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள்மற்றும் பல சமூகத்தவரின் விவசாய நிலங்களில் இருந்து மரவள்ளிக்கிழங்கு லோடு ஏற்றி வர வேண்டும் அதற்கு இடையூறாக ரவி மற்றும் அவரது மகன் நவீன்குமார் ஆகியோரின் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதோடுஇட்டேரி பகுதியில் வாகனம் செல்ல முடியாத அளவுக்கு அடைப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர் இது குறித்து பகுதி பொதுமக்கள் ரவி மற்றும் அவரது மகன் நவீன் குமார் உடன் நேரடியாக பேசியும் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் தாசில்தார் வருவாய் கோட்டாட்சியர் என பல தரப்பினரிடம் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சின்னத்தம்பி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் வந்த தீர்ப்பில் வருவாய் துறையினர்அரசு புறம்போக்கு சாலையாக உள்ள சர்வே எண் 2/1பகுதியை அளந்து ரவி மற்றும் அவரது மகன் நவீன் குமாருக்கு சொந்தமானசர்வே எண் 7/1, 7/2ஆகியவற்றின் எல்லையை வரையறுத்து ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி தர உத்தரவிடப்பட்டுள்ளது இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று வருவாய் துறையினர் மல்ல சமுத்திரம் போலீசார் உடன் சென்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர் அப்போது ரவி மற்றும் அவரது மகன் நவீன் குமார் ரவியின் மனைவி சாந்தி ஆகியோர் இதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடுவட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகபூப் பாஷா மகபூப் பாஷாவருவாய் ஆய்வாளர் சாந்தகுமார்ஆகியோர் எலச்சிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மல்லசமுத்திரம் காவல் நிலையஆய்வாளர் பொறுப்பு ராதா உதவி ஆய்வாளர் கவிப்பிரியா ஆகியோர் உள்ளிட்ட போலீஸ் படையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்அப்போது ரவியின் மனைவி சாந்தி ஆக்கிரமிப்பு அகற்ற விடாமல் சுவற்றின் மேல் அமர்ந்து கொண்டு தடுத்தார் உடனடியாக ஆய்வாளர் ராதா அவரிடம் சென்று நீதிமன்ற உத்தரவுப்படிதான் உங்களது நிலைமை இல்லாத பகுதியை அளந்து தான் அகற்ற வந்திருக்கிறோம் பணி செய்ய விடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படுமே நான் எச்சரித்ததன் அடிப்படையில் சாந்தி சோற்றை விட்டு கீழே இறங்கினார் இதனைத் தொடர்ந்து ஒரு கிலோ மீட்டர் நிலத்திலிருந்து ஆக்கிரமிப்புகள் பொக்லைன் உதவியுடன் முழுமையாக அகற்றப்பட்டு மரவள்ளி கிழங்கு ஏற்ற லாரி செல்ல முடியாமல் இருந்திட்டேரி ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்றி கொடுத்தனர் மாலை சுமார் ஆறு மணி வரை நடந்த இந்த ஆக்கிரமிப்பு அகற்ற பணியினால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பொதுமக்களுக்கு அதிகாரிகளால் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு வாங்கிய சின்னத்தம்பி என்பவர் கூறியதாவது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவரது உடன் பிறந்த அண்ணனுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் சாலை ஓரத்தில் பத்தடி தூரத்திற்கு ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தியதோடு இட்டேரி பகுதியில் பாறைகளைக் கொட்டிவாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தடுப்புகளை ஏற்படுத்தி வந்த ரவி என்பவர் எத்தனையோ முறை நேரில் கேட்டும் அதிகாரிகள் மூலம் கேட்டும் அகற்ற மறுத்ததால் கோர்ட் உத்தரவு வாங்கி இன்று காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளோம் இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் மற்ற சமூகத்து மக்கள் விவசாய நிலங்களில் இருந்து மரவள்ளி கிழங்குகளை ஏற்றிச்செல்ல லாரிகள் வரவும் கார்கள் அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ்கள் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடையில் உள்ளாமல் செல்லவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது வேதனை செய்த தந்த காவல் துறையினர் வருவாய் துறையினர் அனைவருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.ஆக்கிரமிப்புஅகற்றும் பணியால் சின்ன கோட்டப்பாளையம் பகுதியில்காலை முதல் மாலை வரை பரபரப்பு ஏற்பட்டது.
Next Story



