கலவை அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளிகளின் படுக்கை எண்ணிக்கை உட்பட மருத்துவர்கள் நியமனம் செய்தல் உட்பட 10 தீர்மானங்கள் விசிக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றம்..

X
Ranipet King 24x7 |29 Jan 2026 4:31 PM ISTஇந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமார், ஆகியோர் பேருரை ஆற்றினார்கள். அதில் கலவை, வாழைப்பந்தல் காவல் துறையினர் தலித் மக்களுக்கு எதிராகவே வேண்டுமென்றே பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும் என கண்டனம் தெரிவித
கலவை அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளிகளின் படுக்கை எண்ணிக்கை உட்பட மருத்துவர்கள் நியமனம் செய்தல் உட்பட 10 தீர்மானங்கள் விசிக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றம்.. ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அம்பேத்கர் சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், கலவை நகரிலிருந்து சென்னைக்கு நேரடியாக தரமான விரைவு பேருந்து இயக்க வேண்டும், கலவை பகுதியில் புதிய அரசு கல்லூரி அமைக்க வேண்டும், கலவை ஏரியை தூர் வாரி நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த வேண்டும், புதிய நீதிமன்றம் அமைக்க வேண்டும், டிசி நிலங்களை பத்திரபதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக்கள் முன் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் மாம்பாக்கம் பாபுவளவன் தலைமையில் நடைபெற்றது. தொகுதி செயலாளர் சிறுத்தை சின்னையன் அனைவரையும் வரவேற்றார். இதில் கலவை நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமார், ஆகியோர் பேருரை ஆற்றினார்கள். அதில் கலவை, வாழைப்பந்தல் காவல் துறையினர் தலித் மக்களுக்கு எதிராகவே வேண்டுமென்றே பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், கலவை அரசு பொது மருத்துவமனையில் உட்புற நோயாளிகளின் படுக்கை எண்ணிக்கை மற்றும் மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும், ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் எஸ்சி எஸ்டி மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை வருவாய் துறை கிராம கணக்கில் ஏற்றி பட்டா வழங்க வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும், பாலி, கோடாலி ஆகிய கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கல்வி பயில பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியின் நன்றி உரையாக தொகுதி துணை செயலாளர் நாகலேரி சிவா உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
