துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் 100 இடங்களில் நலத்திட்ட உதவிகள்!-நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் 100 இடங்களில் நலத்திட்ட உதவிகள்!-நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர்களில் கழகக் கொடிக்கம்பங்களிலும் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் உணவு வழங்கியும், கழக மூத்த முன்னோடிகள் 25 நபர்களுக்கு பொற்கிழி, வேஷ்டி, சேலை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயற்குழுக் கூட்டம் நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இனமான பேராசிரியர் அரங்கத்தில் மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன் தலைமையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக துணை செயலாளருமான கே.பொன்னுசாமி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கத் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து விளக்கம் அளித்து சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், நாமக்கல் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளருமான முனவர்ஜான், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில நெசவாளர் அணி தலைவருமான நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் நடத்தப்படுவது என தீர்மானிக்கப்பட்டது
.இதில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர்களில் கழகக் கொடிக் கம்பங்களிலும் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது,ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் உணவு வழங்கியும், கழக மூத்த முன்னோடிகள் 25 நபர்களுக்கு பொற்கிழி, வேஷ்டி, சேலை வழங்கியும், மரக்கன்றுகளை மாவட்ட வனத்துறை மூலம் நேரில் சென்று பெற்று குறைந்தது 25 முதல் 50 மரக்கன்றுகளை வைத்து, அதனை நன்கு பராமரிப்பு செய்வது, ஒன்றிய, நகர, பேரூர்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவியர்களுக்கு நோட்டு, புத்தகம்,பேனா ஆகியவற்றை வழங்குவது, ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பால், பிரட் வழங்குவது,
நாமக்கல் மாநகரில் மாநகர கழகத்திற்கென புதிய கட்டிடம் கட்டுவது எனவும், அதற்காக நாமக்கல் கோட்டை திருப்பாக்குளத் தெருவில் உள்ள இடத்தில் பயன்படுத்திக் கொள்ளவும்
, அதற்கான பணிகளை மேற்கொள்ள குழுத் தலைவராக மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன், துணைத்தலைவராக நாமக்கல் மேற்கு மாநகர செயலாளர் அ.சிவக்குமார், மாநகராட்சி துணை மேயரும், நாமக்கல் கிழக்கு நகர செயலாளருமான செ.பூபதி, பொருளாளராக நாமக்கல் தெற்கு மாநகர செயலாளர் ராணா ஆர்.ஆனந்த் ஆகியோரை நியமிப்பது எனவும், மேற்படி கட்டிடம் கட்ட வங்கியில் புதிய வங்கிக் கணக்கை துவக்கி வரவு செலவுகளை நிர்வகிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
Next Story