சங்கரன் பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூ 100 பறிமுதல்.

சங்கரன் பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூ 100 பறிமுதல்.
சங்கரன் பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூ 100 பறிமுதல். கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், நவம்பர் 28ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில், சங்கரன்பாளையம் பகுதியில் ரோந்து பகுதியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள குணசேகர் என்பவரது தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் வெங்கமேடு அண்ணா தெருவை சேர்ந்த தர்மராஜ், கரூர் மன்மங்கலம் கிழக்கூர் பகுதியைச் சேர்ந்த மனோகர் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் நூறையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story