அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்
Perambalur King 24x7 |25 Dec 2025 9:58 PM ISTமறைந்த பாரத பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 100- வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அவரது திருவுருவப்படத்திற்கு பாஜக பெரம்பலூர் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் .
பெரம்பலூரில் அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மறைந்த பாரத பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 100- வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அவரது திருவுருவப்படத்திற்கு பாஜக பெரம்பலூர் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் . அதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ பிரிவு சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் சித்தார்த்தன், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் வரதராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயபாலாஜி, பழனியாண்டி,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சேகர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயா செல்வகுமார், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் விஜயலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
Next Story



