உலக முட்டை தினம் - 10,000 முட்டைகளை இலவசமாக வழங்கிய நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள்!

X
Namakkal King 24x7 |10 Oct 2025 10:11 PM ISTநாமக்கல்லில் உலக முட்டை தினத்தையொட்டி, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில், பொதுமக்களுக்கு இலவசமாக,10 ஆயிரம் வேக வைத்த முட்டைகள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் 1996-ம் ஆண்டு நடந்த சர்வதேச முட்டை ஆணையத்தின் கருத்தரங்கில்தான் உலக முட்டை தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2-வது வெள்ளிக் கிழமை உலக முட்டை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.நாமக்கல்லில், உலக முட்டை தினத்தையொட்டி, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில், 10 ஆயிரம் வேகவைத்த முட்டைகளை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள சங்க வளாகத்தில் நடைபெற்றது.இந்த ஆண்டு(2025) உலக முட்டை தினத்தின் கருப்பொருள், 'வல்லமையுள்ள முட்டை: இயற்கை ஊட்டச்சத்து நிரம்பியது', உலகெங்கிலும் உள்ள மக்களை வளர்ப்பதில் முட்டைகள் வகிக்கும் சக்திவாய்ந்த பங்கைக் கொண்டாடுகிறது என்பதாகும்.இந்த நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் இளங்கோ முன்னிலை வகித்தார்.அப்போது,பொதுமக்களுக்கு சங்க வளாகத்தில் தலா வேக வைத்த 2 முட்டைகளை சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.மேலும், நாமக்கல் - சேலம் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோருக்கு, முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.தொடர்ந்து நாமக்கல் நகரின் பல்வேறு இடங்களில் வேக வைத்த முட்டைகள் பொதுமக்களுக்கு, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சார்பில் வழங்கப்பட்டன. பொதுமக்கள் ஆர்வத்துடன் முட்டைகளை வாங்கி ருசித்து சாப்பிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ்அகில இந்திய அளவில் முட்டை நுகர்வில் நாம் முதலிடம் பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-வது வெள்ளிக் கிழமை உலக முட்டை தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.கலப்படமில்லாத சத்தான உணவான முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினம் 2 முதல் 4 முட்டைகள் வரை சாப்பிடலாம். வாரம் ஒன்றுக்கு 2 கோடி முட்டைகள் சத்துணவு திட்டத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கோழிப் பணியாளர் சங்க அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பேருந்து பயணிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வேகவைத்த 10 ஆயிரம் முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.கடந்த 15 ஆண்டுகளாக இது போன்று உலக முட்டை தினத்தில் முட்டைகளை வழங்கி வருகிறோம்.புரட்டாசி மாதத்தில் முட்டை நுகர்வு நன்றாகவே இருந்தது. தொடர்ந்து தீபாவளி ,கிறிஸ்மஸ் புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் வர உள்ளதால் முட்டையின் நுகர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.ஏற்றுமதியும் தற்போது நன்றாக உள்ளது. எனவே முட்டை விலை உயரும்.தமிழ்நாடு கோரிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடம் மனுவை அளித்துள்ளோம். அதில் கோழி தீவன மூலப்பொருட்கள் மூலப் பொருட்களுக்கு இருக்கும் 5 சதவீத சரக்கு- சேவை வரியை நீக்க வேண்டும் என்றும், காவிரி உபரி நீரை மின்மோட்டார் மூலம் பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டு வந்து, அதை திருமணிமுத்தாற்றில் கொண்டு வந்து சேர்த்தால், பல இலட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். விளைவிக்கின்ற பொருள் கோழிப்பண்ணை தொழிலுக்கும் பயன்படும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம் அது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாகவும் பேட்டியின்போது தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு கோழிப் பணியாளர்கள் சங்கப் பொருளாளர் இளங்கோ, துணை செயலாளர் சசிகுமார், நிர்வாக குழு உறுப்பினர்கள், பிரபு, சுப்பிரமணி, வேல்முருகன், டாக்டர் மேகநாதன், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல் மண்டல மேலாளர் பாலு தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர். முட்டை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சத்துகள் குறித்து எடுத்துக் கூறி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
