அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ சீதாராம பால ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10008 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு!!

X
அனுமன் ஜெயந்தியையொட்டி ஸ்ரீ சீதாராம பால ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10008 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் ராமர்மடம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சீதாராம பால ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு 10008 வடை மாலை சாத்தப்பட்டது முன்னதாக பால் ,பன்னீ,சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், மாப்பொடி, உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு வெற்றிலை, துளசி, எலுமிச்சம்பழம், மற்றும் மறுகை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து 10008 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி ரவிச்சந்திரன் செய்து இருந்தார்.
Next Story
