சாய்பாபாவின் 107-வது மகா சமாதி தினத்தையொட்டி, நாமக்கல் இந்திரா நகர் சாய் தத்தா பிருந்தாவனத்தில் சிறப்பு வழிபாடு !
Namakkal King 24x7 |2 Oct 2025 9:59 PM ISTசாய்பாபாவுக்கு நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களைப் பாடினர்.பெண்கள் அகல் விளக்குகள் மூலம் சாய்பாபாவின் உருவத்தையும். அவரது நாமத்தையும் (OM SAI RAM) அகல் விளக்கு மூலமாக ஏற்படுத்தினர்.
சீரடியில் உள்ள சாய் பாபா ஆலயத்துக்கு உலகம் முழுவதும் கோடான கோடி பக்தர்கள் இருக்கிறார்கள். சாய்பாபா 1918-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். இதையடுத்து ஆண்டு தோறும் விஜயதசமி தினத்தன்று சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தினத்தை அவரது பக்தர்கள் நடத்தி வருகிறார்கள்.சாய்பாபாவின் 107-வது மகா சமாதி தினம் நாமக்கல் - திருச்சி சாலை கோல்டன் பேலஸ் ஹோட்டல் எதிரில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன... சிறப்பு பூஜைகளில் சாய் சரிதம்,சாய் பாராயணம் , சாய்பாபா காயத்ரி அஷ்டோத்ர ஹோமங்கள், மதியம், சாய் சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் , தொடர்ந்து பக்தர்கள் சாய்பாபாவிற்கு ஆரத்தி காட்டும் நிகழ்வு நடந்தது. மதியம் 2 மணியளவில் அன்னதானம், வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். சாய்பாபாவுக்கு நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களைப் பாடினர்.பெண்கள் அகல் விளக்குகள் மூலம் சாய்பாபாவின் உருவத்தையும். அவரது நாமத்தையும் (OM SAI RAM) அகல் விளக்கு மூலமாக ஏற்படுத்தினர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.நாள் முழுவதும் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சாய் ஹர்ஷா பவுண்டேசன் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Next Story


