அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் அவர்களின் 109 - வது பிறந்தநாள்- முழு உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் MR.விஜயபாஸ்கர் தலைமையில் மாலை அணிவித்து புகழஞ்சலி.
Karur King 24x7 |17 Jan 2026 1:27 PM ISTஅதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் அவர்களின் 109 - வது பிறந்தநாளை முன்னிட்டு முழு உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் அவர்களின் 109 - வது பிறந்தநாளை முன்னிட்டு முழு உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த தமிழக முதலமைச்சர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர், டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மற்றும் எம்ஜிஆர் திரைப்பட ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவர்களின் முழு வுருவ சிலைகளுக்கு முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை சிறப்பித்தனர்.
Next Story





