சிவன் கோவிலில் 11ஆம் தேதி தைப்பூசம் தெப்பத் திருவிழா!

சிவன் கோவிலில் 11ஆம் தேதி தைப்பூசம் தெப்பத் திருவிழா!
X
தூத்துக்குடி சிவன் கோவிலில் வருகிற 11ஆம் தேதி செவ்வாய்கிழமை தைப்பூசம் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது
தூத்துக்குடி சிவன் கோவிலில் வருகிற 11ஆம் தேதி செவ்வாய்கிழமை தைப்பூசம் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. தூத்துக்குடியில், பிரசித்தி பெற்ற சிவன் கோவில் எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் வருகிற 11ஆம் தேதி செவ்வாய்கிழமை தைப்பூசம் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்ப பூஜை, ருத்ரஜெபம், மூலமந்தரம் மாலாமந்தரம், ஹோமம், மஹா அபிஷேகம், தீர்த்தவாரி, கும்பாபிஷேகம் பூஜைகள் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு ஷோடச மஹா தீபாராதனை, இரவு 7.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ சுந்தரபாண்டி விநாயகர், அருள்தரும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளி, மங்கள இசை, வேதபாராயணம், திருமுறைபாராயணம், திருச்சுற்றுவலம் வருதல் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ சுந்தரபாண்டி விநாயகர், அருள்தரும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் ரதவீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
Next Story