கட்டனாச்சம்பட்டி கிராமத்தில் அருள்மிகு பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 11 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதேசி விழா...

X
Rasipuram King 24x7 |30 Dec 2025 7:21 PM ISTகட்டனாச்சம்பட்டி கிராமத்தில் அருள்மிகு பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 11 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதேசி விழா...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி கிராமத்தில் அருள்மிகு பொன் வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் 11.ம் ஆண்டாக வைகுண்ட ஏகாதசி திருவிழா மற்றும் ஐந்தாம் ஆண்டு பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம் நடைபெற்று பின்னர் அதிகாலை 5 30 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டு திருக்கோடி ஏற்றுதல் நிகழ்ச்சியும் பின்னர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி திருவீதி உலா விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கும் தங்கக்காப்பு அலங்காரமும் ஸ்ரீதேவி பூதேவி பொன் வரதராஜ பெருமாள் சாமிக்கும் தங்கக் கவசம் அலங்காரம் சாத்தப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது . பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கி சிறப்பித்தனர்.
Next Story
