அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் கொண்டாடப்பட்டது. கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆர்.பி.மருதராஜா முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அருகில் இருந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நாகராஜன் மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story