முதல்முறையாக கணினி மூலம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு

முதல்முறையாக கணினி மூலம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
X
தமிழகத்தில் முதல்முறையாக கணினி மூலம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள பார்வை திறன் குறைபாடுடைய அரசு பள்ளி மாணவர்
தமிழகத்தில் முதல்முறையாக கணினி மூலம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள பார்வை திறன் குறைபாடுடைய அரசு பள்ளி மாணவர் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக மாணவ மாணவிகள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். சென்னை அடுத்த பூந்தமல்லியில் பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பார்வை திறன் குறைபாடுடைய மாணவ மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வுக்கு 18 மாணவர்கள் தயாராகி வருகின்றனர். பார்வை திறன் குறைபாடுள்ள மாணவர்கள் வழக்கமாக தேர்வு எழுதும் போது அவர்கள் சொல்ல சொல்ல மற்றொருவர் தேர்வு எழுதுவார். தற்போது வரை தமிழகத்தில் இப்படித்தான் பார்வை குறைபாடு உடைய மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு இங்கு 12ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்த் என்ற மாணவர் கணினி மூலம் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்றார் .‌ இது தொடர்பாக கணினி மூலம் தேர்வு எழுத அனுமதி கேட்டு பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து வாசிப்பாளர் ஒருவர் கேள்விகளை வாசிக்க, அந்த மாணவர் கணினியில் அதற்கான பதிலை எழுதுவார். தமிழகத்திலேயே கணினி மூலம் தேர்வு எழுதும் பார்வை திறன் குறைபாடு உள்ள முதல் மாணவன் என்ற பெருமையை ஆனந்த் பெற்றுள்ளார். இதற்காக இவர் இரண்டு ஆண்டுகள் கடினமாக பயிற்சி பெற்றுள்ளார் . மேலும் டைப்ரைட்டிங் பயிற்சிக்கும் சென்றுள்ளார். பல்வேறு கட்ட பயிற்சிகள் நடத்தப்பட்ட பின்பு இவர் கணினி மூலம் தேர்வு எழுத தயாராகி உள்ளார் . அதற்காக பிரத்தியேகமாக கணினியில் சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கணினி மூலம் தேர்வு எழுத உள்ளார். வழக்கமாக ஒரு மாணவருக்கு மூன்று மணி நேரம் தேர்வு எழுத நேரம் ஒதுக்கப்படும் நிலையில் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து அந்த மாணவர் கூறும் போது, அரசு பள்ளியில் பார்வை திறன் குறைபாடுள்ள மாணவர்கள் சொல்ல சொல்ல மற்றொருவர் எழுதும் நிலையில் தமிழகத்திலேயே முதல் முறையாக கணினியில் சொந்தமாக தேர்வு எழுதுவது வரவேற்பு பெற்றுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோன்று மற்ற மாணவர்களும் கணினி மூலம் எழுதுவதற்கு பயிற்சி எடுக்க வேண்டும் என அந்த மாணவர் தெரிவித்தார்.
Next Story