காங்கேயத்தில் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி - திருப்பூர் அணி வெற்றி 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காங்கேயம் கிரிக்கெட் அகாடமி சார்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூர் ,ஈரோடு,கோவை சேர்ந்த 12 அணிகள் கலந்து கொண்டது. திருப்பூர் டிஎஸ்சி அணியும் திருப்பூர்  சூரிஸ் கிரிக்கெட் சென்டர் அணிகள் இறுதி போட்டியில் மோதியது. டிஎஸ்
காங்கேயம் படியாண்டிபாளையத்தில் காங்கேயம் கிரிக்கெட் அகாடமி கிரிக்கெட் மைதானம் உள்ளது.இங்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும் காங்கேயம் கிரிக்கெட் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட் டோர்னமெண்ட் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சிறுவர்களை கிரிக்கெட் போட்டிக்கு ஆயத்தம் செய்யும் வகையில் 12 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. ஒருவாரம் இந்த போட்டிகள் நடைபெற்றது, போட்டிகளில் ஈரோடு,திருப்பூர்,கோவையை சேர்ந்த 12 அணிகள் கலந்து கொண்டனர்.  லீக் சுற்றுகளில் வெற்றி பெற்று திருப்பூர் டிஎஸ்சி அணியும் திருப்பூர்  சூரிஸ் கிரிக்கெட் சென்டர் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதி போட்டியில்  திருப்பூர் டிஎஸ்சி அணி முதலில் பேட்டிங் பிடித்து 25 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 167 எடுத்தனர். அந்த அணியின் மிர்தார்த் காங்கேயன் அதிகபட்சமாக 69 ரன்களும் அனுமித்ரா 41 ரன்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தது. பின்னர் இரண்டாவது பேட்டிங் பிடித்த சூரிஸ் கிரிக்கெட் சென்டர் 25 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரங்களே அடிக்க முடிந்தது. இதனால் திருப்பூர் டிஎஸ்சி அணி 7 ரன்களில் வெற்றி பெற்றது. சூரிஸ் கிரிக்கெட் சென்டரின் வைதீஷ் 39 ரன்களும், கௌசிகா 33 ரன்களும், அமித்ரன் 25 ரன்களும் எடுத்தும் அந்த அணி இரண்டாவது இடமே பிடித்தது.  திருப்பூர் டிஎஸ்சி அணியின் மிர்தார்த் காங்கேயன் தொடர் நாயகன் விருதையும், திருப்பூர் டிஎஸ்சி அணி மாணவி அணுமித்ரா அதிக ரன்கள் அடித்து சிறந்த பேட்ஸ்மேன் விருதையும்,காங்கேயம் கிரிக்கெட் அகாடமி மாணவன் சுபின் பொடரன்  10 விக்கெட்டுகளை எடுத்து சிறந்த பந்துவீச்சாளர் விருதையும் பெற்று உள்ளனர்.
Next Story