தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஜனவரி 12-ஆம் தேதி மாபெரும் முற்றுகை போராட்டம்!-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள பில்டர்ஸ் மஹாலில் நடைபெற்றது.
நீதிமன்றத்தில் சாட்சிகளை காணொளி காட்சி மூலம் விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்றும், கட்டாய மின்-தாக்கல் (இ-பைல்லிங்) முறையையும், நீதிமன்றத்தில் சாட்சிகளை காணொளி காட்சி மூலம் விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வந்துள்ள அரசாணையையும் ரத்து செய்ய வலியுறுத்தி, வருகின்ற 12 ஆம் தேதி கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும்,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கரூர் என். மாரப்பன் இன்று பேட்டியின்போது கூறினார்
.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டமைப்பின் தலைவர் கரூர் என். மாரப்பன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட வாரியாக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் எட்டு அம்ச தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், நீதிமன்றங்களில் மின்-தாக்கல் முறையை கண்டித்து வருகின்ற 18 ஆம் தேதி வரை கூட்டமைப்பின் சார்பில் பணி விலகல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.,நீதிமன்றத்தில் சாட்சிகளை காணொளி காட்சி மூலம் விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள அரசாணையை திரும்ப பெற வேண்டும்.,பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று இதுவரை கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்ட வந்த முறையை நிறுத்தி இனிவரும் ஆண்டுகளில் பிப்ரவரி 19 ஆம் தேதியன்று பணி விலகல் போராட்டம் கடைபிடிக்கப்படாது என்றும் கருப்பு பேட்ச் அணிந்து நீதிமன்றம் செல்லலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சட்ட அறையை உயர்நீதிமன்றமும் தமிழக அரசும் அமைத்து தரவேண்டும்.,கட்டாய மின் தாக்கல் முறையை ரத்து செய்ய வேண்டி கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.,மின்-தாக்கல் முறை பிரச்சனை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நேரடியாக சந்தித்து முறையிடப்படும்.கட்டாய மின்-தாக்கல் முறையையும்,
நீதிமன்றத்தில் சாட்சிகளை காணொளி காட்சி மூலம் விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வந்துள்ள அரசாணையையும் ரத்து செய்ய வலியுறுத்தி, வருகின்ற 12-ம் தேதி கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கரூர் என். மாரப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,உயர் நீதிமன்றத்தின் அறிக்கையின்படி, நீதிமன்றங்களில் மின்-தாக்கல் முறையை கட்டாயப்படுத்தியதால், தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் கூட்டமைப்பின் சார்பில், மின்-தாக்கல் முறையை ரத்து செய்து, மேனுவல் நடைமுறையை அமலாக்க வேண்டும். திறன்மிக்க, பயிற்சி பெற்ற நீதிமன்ற ஊழியர்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தாமல், வழக்கறிஞர்களை துன்புறுத்தும், அச்சுறுத்தும் நோக்கத்தில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தியபோதும் இதுவரை செவி கொடுத்துக் கேட்க வில்லை.எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக, வருகின்ற 18 ஆம் தேதி வரை நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்றும், மின் தாக்கல் முறையை ரத்து செய்யக் கோரியும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரசு சாட்சியங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைமுறைப்படுத்துவதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும்,
12 ஆம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும், வழக்கறிஞர்கள் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அதன் அடிப்படையில் சரி செல்லவும் தயார் என்றும் கூறினார்.
மேலும், நாங்கள் மின் தாக்கல் முறைக்கு எதிரானவர்கள் அல்ல. கட்டமைப்பை ஏற்படுத்தி அதற்குப் பிறகு இந்த முறையை நடைமுறைப்படுத்தலாம். தமிழகத்தில் நீதிமன்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான நவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் மின்-தாக்கல் முறையை கொண்டு வரக்கூடாது.தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு ஒரு லட்சம் வழக்கறிஞர்களுக்கு மேல் உள்ளனர். அவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தங்களை பார் கவுன்சிலில் பதிவு செய்து வருகிறார்கள்.வழக்கறிஞர்கள் சேம நலநிதியாக 25 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடைமுறைப்படுத்த வில்லை. அந்த நிதியை 25 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை மத்திய-மாநில அரசுகள் மெத்தனத்தை கடைபிடிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கரூர் என். மாரப்பன் பேட்டியின் போது கூறியுள்ளார்.
இந்த பேட்டியின்போது, அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ். பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ் அமல்ராஜ், பொதுச் செயலாளர் ரா. அய்யாவு,தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் துணை தலைவர் வேலு.கார்த்திகேயன், கூட்டமைப்பின் செயலாளர்கள் விவேகானந்தன், நாராயணகுமார், பொருளாளர் காளிதாஸ் , இணை செயலாளர்கள் தங்கதுரை,நந்தகோபால், செல்வகுமார், நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story