திருச்செங்கோட்டில் டாஸ்மார்க் ஊழியர்கள் 12 மணி முதல் 3 மணி வரை டாஸ்மார்க் கடைகளை அடைத்து அடையாள வேலை நிறுத்தம்

X
Tiruchengode King 24x7 |9 Feb 2026 7:30 PM ISTபாட்டில்களை திரும்ப வாங்க வலியுறுத்தக் கூடாதுபணி நிரந்தரம் அரசு ஊழியர்களுக்குஇணையான சம்பளம் ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செங்கோட்டில் டாஸ்மார்க் ஊழியர்கள் 12 மணி முதல் 3 மணி வரை டாஸ்மார்க் கடைகளை அடைத்து அடையாள வேலை நிறுத்தம்
டாஸ்மார்க் ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் நண்பகல் 12 மணியிலிருந்து 3 மணி வரை அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைகள் அனைத்தையும் 3 மணி நேரம் மூடி டாஸ்மாக் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். இது குறித்து டாஸ்மார்க் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த மேற்பார்வையாளர் குணசேகரன் கூறும்போது டாஸ்மார்க் ஊழியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக பணி செய்து வருகிறார்கள் டாஸ்மார்க் ஊழியர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது இன்று மூன்று மணி நேரம் கடையை அடைத்து நீங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம் எங்களது கோரிக்கைகள் பணி நிரந்தரம் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் எங்கள் கோரிக்கை நிறைவேற மூன்று மணி நேரம் அடையாள வேலை நிறுத்த போராட்டம் செய்துள்ளோம் காலி பாட்டில் திட்டத்தை அரசு எங்கள் மீது திணித்து பணி சுமையை ஏற்படுத்தி உள்ளது இதற்கு தனி ஆட்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என கூறினார். இந்தப் போராட்டத்தில் திருச்செங்கோடு பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மார்க் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story
