பெரம்பலூரில் காவல் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வினை 125 பெண்கள் உட்பட 1009 தேர்வு எழுதினார்.

தமிழக காவல்துறை போலிஸ் வெல்ஃபர் ஐஜி சத்யபிரியா, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு
பெரம்பலூரில் காவல் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வினை 125 பெண்கள் உட்பட 1009 பேர் எழுதி வருகின்றனர். தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 388 பெண்கள் உட்பட 1,425 நபர்கள் விண்ணப்பித்தனர். இந்நிலையில் இன்று காலை தேர்வு தொடங்கியது. தேர்வு எழுத 125 பெண்கள் உட்பட 1,009 நபர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். மீதமுள்ள 416 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வரவில்லை. காலை 9 மணிக்கு தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட இவர்களுக்கு தேர்வு நடந்து நடைபெற்று வரும் நிலையில் எழுத்து தேர்வு மையங்களில் தமிழக காவல்துறை போலிஸ் வெல்ஃபர் ஐஜி சத்யபிரியா, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர். இந்த தேர்வு பணியில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story