திருப்பத்தூர் அருகே தவறி கிணற்றில் விழுந்த 13 பன்றிகள் மீட்பு
Tirupathur King 24x7 |11 Jan 2025 10:50 AM GMT
திருப்பத்தூர் அருகே தவறி கிணற்றில் விழுந்த 13 பன்றிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு!
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன சமுத்திரம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 13 காட்டுபன்றிகள் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன சமுத்திரம் காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த பழனி மகன் நந்தகுமார் இவருக்கு சொந்தமான 30 அடி ஆழமுள்ள விவசாய கிணறு உள்ளது. இந்த நிலையில் அருகே உள்ள காப்பு காட்டில் இருந்து காட்டு பன்றிகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்துள்ளது. அப்போது திடீரென நந்தகுமாரின் விவசாய கிணற்றில் 13 காட்டுப் பன்றிகள் தவறி விழுந்துள்ளன. இதனை அறிந்த நந்தகுமார் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன் காரணமாக நிலைய அலுவலர் தசரதன் தலைமையில் சரவணன், கோகுல்ராஜ், வைகுந்தவாசன், ஸ்ரீகாந்த், ஆகிய தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுள் விழுந்த காட்டு பன்றிகளை சிறிது நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட காட்டுப் பன்றிகளை அருகே உள்ள காப்பு காட்டுக்குள் விட்டனர். தண்ணீர் தேடி வந்த 13 காட்டு பன்றிகள் கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
Next Story