மாயனூர் கதவணையிலிருந்து வினாடிக்கு 13,000 கன அடி தண்ணீர் திறப்பு

மாயனூர் கதவணையிலிருந்து வினாடிக்கு 13,000 கன அடி தண்ணீர் திறப்பு
X
13 ஆயிரம் கன அடி தண்ணீர் 30 மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது.
கரூர்,கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணை முழு கொள்ளளவு எட்டியதால் வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் 30 மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது.தற்போது மாயனூர் கதவணையின் முழு கொள்ளளவான 5.10 மீட்டரை எட்டியது. கதவணை முழு கொள்ளளவை எட்டியதால் கடல் போலகாட்சி அளிக்கிறது.இந்நிலையில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 989 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. கதவணையிலிருந்து காவிரியில் 13 ஆயிரத்து 69 கன அடி தண்ணீர் 30 மதகுகள் வாயிலாகவும், காவிரி ஆற்றில் இருந்து பிரியும் தென்கரை வாய்க்கால் 400 கனஅடி, கட்டளை மேட்டு வாய்க்கால் 200 கன அடி,புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் 300 கனஅடி, கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் 20 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது.
Next Story