தேவ கவுண்டனூரில் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது.ரூ 1400 மதிப்புள்ள 140 கிராம் கஞ்சா பறிமுதல்.

தேவ கவுண்டனூரில் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது.ரூ 1400 மதிப்புள்ள 140 கிராம் கஞ்சா பறிமுதல்.
தேவ கவுண்டனூரில் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது.ரூ 1400 மதிப்புள்ள 140 கிராம் கஞ்சா பறிமுதல். கரூர் மாவட்டம், வெள்ளியணை சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக போதை தடுப்பு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வெள்ளியணை சுற்றுவட்டார பகுதியில் நவம்பர் 29ஆம் தேதி காலை 7:30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தேவ கவுண்டனூர் பகுதியில் செயல்படும் செக்போஸ்ட் பகுதிக்கு வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது, அவரிடம் இருந்து 140 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை, பனைப்பாக்கம், நாவலூர் ஹவுசிங் போர்டைச் சேர்ந்த மறைந்த அன்புராஜ் மகன் அஜித் குமார் வயது 23 என்பது தெரிய வந்தது. உடனே அஜித் குமாரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர்
Next Story