நிலைகொண்ட புயலால் நிதானமாக பெய்த மழை. கரூரில் 14.60 மில்லி மீட்டர் மழை பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
Karur King 24x7 |30 Nov 2024 4:17 AM GMT
நிலைகொண்ட புயலால் நிதானமாக பெய்த மழை. கரூரில் 14.60 மில்லி மீட்டர் மழை பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
நிலைகொண்ட புயலால் நிதானமாக பெய்த மழை. கரூரில் 14.60 மில்லி மீட்டர் மழை பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தெற்கு வங்க கடலில் கடந்த 25ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது நேற்று முன்தினம் புயலாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வளிமண்டல அடுக்குகளில் ஏற்பட்ட காற்று முறிவு காரணமாக, புயலாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டு புயல் நிலை கொண்டது. இதன் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் மேகமூட்டத்துடன் லேசான முதல் மிதமான மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. அந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில்,கரூரில் 3. 40 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 5.00 மில்லி மீட்டர், அணைப்பாளையத்தில் 2.20 மில்லி மீட்டர், க.பரமத்தியில் 4.00 மில்லி மீட்டர் என மொத்தம் 14.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 1.22 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story