இருசக்கர வாகனங்களை திருடிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 15 இருசக்கர வாகனங்கள் மீட்ட அரக்கோணம் காவல்துறையினர்.

X
Ranipet King 24x7 |1 Feb 2026 5:24 PM ISTஇராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், உத்தரவின் படி அரக்கோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் மேற்பார்வையில் அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் அசோகன் தலைமையிலான போலீசார் அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட அம்பேத்கார் நகர் ஓடியன் மணி தியேட்டர் ஜங்ஷன் அருகே தீவிர சோதனை
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், உத்தரவின் படி, அரக்கோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் மேற்பார்வையில், அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் அசோகன் தலைமையிலான போலீசார் அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட அம்பேத்கார் நகர், ஓடியன் மணி தியேட்டர் ஜங்ஷன் அருகே தீவிர வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த வேலூரை சேர்ந்த பரமேஸ்வரன், திருவள்ளூரை சேர்ந்த கார்த்திக் ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் பல்வேறு இடங்களில் இருந்து திருடிய இருசக்கர வாகனங்கள் including பல்சர், பேஷன் ப்ரோ, ஸ்ப்ளெண்டர்+, ஹோண்டா ஷைன், டியோ, ஹோண்டா ஆக்டிவா போன்ற 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பரமேஸ்வரன், கார்த்தி, ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
