நாமக்கல் மாவட்டத்தில் ரூ.168.09 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் தலா ரூ.3000/- வழங்கப்படுகிறது. எம்.பி கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல்.உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறி, மரியாதை செலுத்தும் நன்னாளாகவும், தமிழர் அனைவரும் ஓரினம் என்ற தமிழினத்தின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் பொன்னாளாகவும் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.3,000/- ரொக்கம் ஆகியவை வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திடும் வகையில், வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படுகிறது.அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் சென்னையில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.3,000/- ரொக்கம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் நகராட்சி முல்லை நகர், இராசிபுரம் நகராட்சி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மற்றும் சேந்தமங்கலம் வட்டம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மாவட்ட ஆட்சியர் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.து.கலாநிதி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000/- ரொக்கம், இலவச வேட்டி, சேலைகள் ஆகியவற்றை வழங்கினார்.அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக கொண்டாட வேண்டும் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எண்ணம். அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் சென்னையில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.3,000/- ரொக்கம் வழங்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார்கள்.அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறோம்.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 5,40,232 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.168.09 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் தலா ரூ.3,000/- ரொக்கம் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறும் அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நாளைய தினம் 546 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்படவுள்ளது. அனைது பகுதிகளிலும் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஏறத்தாழ 35,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கே முன்னுதாரணமாக நாமக்கல் மாவட்டம் திகழ்கிறது. கூட்டுறவுத்துறையில் ஒரு புத்துணர்ச்சி என்றால், அது நாமக்கல் மாவட்டத்திற்கென தனியாக ஒரு மத்திய கூட்டுறவு வங்கி. மாவட்ட மத்திய கூட்டுறவ வங்கி மூலம் வைப்பு நிதிகள் அதிகளவில் பெற்று, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.

Next Story