நாமக்கல் டிரினிடி அகாடமி பள்ளியில் 17 ஆம் ஆண்டு நவராத்திரி விழா.

நாமக்கல் டிரினிடி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கொலு வைத்து வழிபடும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
கொலு என்றால் அழகு என்று பொருள். கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். நவராத்திரி விழாவை கொலு வைத்து கொண்டாடுவது நமது நாட்டு மரபு. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நாளில் ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலன்களும் மற்றும் ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. பெரும்பாலும் இந்தியாவின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகிய பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நாமக்கல் டிரினிடி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 16 ஆண்டுகளாக கொலு வைத்து வழிபடும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதைப்போல் இந்த ஆண்டும் கொலு வைத்து வழிபடும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வந்து அவர்களின் பிராத்தனைகளை இங்குள்ள கடவுள் பொம்மைகளின் முன் நின்று வேண்டிக் கொள்கின்றனர். அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அவர்கள் விருப்பத்திற்க்கு ஏற்ப வேண்டிக் கொண்டவற்றை இங்கு கொண்டு வந்து கொடுத்து தங்களின் வேண்டுதல்களை நிறைவு செய்கின்றனர். இந்த வருடம் சிறப்பு விருந்தினராக பள்ளியின் தலைவர் டாக்டர்.இரா.குழந்தைவேல் அவர்களும் செயலாளர் சந்திரசேகரன் அவர்களும் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் முதல்வர் சோமசுந்தரம் அவர்களும் மற்றும் துணை முதல்வர் ரமேஷ் அவர்களும் வரவேற்றனர். இறுதியில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைவரும் ஒரு நாள் நவராத்திரி அன்று இப்பள்ளிக்கு வருகை தந்து தேவிகளின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Next Story