தக்கோலம் விருத்தசீர ஆற்றின் குறுக்கே ரூபாய் 17.65 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்.
Ranipet King 24x7 |1 Feb 2026 8:36 PM ISTதமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம் பேரூராட்சி தண்டலம் பேரம்பாக்கம் தக்கோலம் அரிகிலபாடி மாநில நெடுஞ்சாலை 50பி கி.மீ 31/6ல் விருத்தசீர ஆற்றின் குறுக்கே ரூபாய் 17.65 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
தக்கோலம் விருத்தசீர ஆற்றின் குறுக்கே ரூபாய் 17.65 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார். இராணிப்பேட்டை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம் பேரூராட்சி தண்டலம் பேரம்பாக்கம் தக்கோலம் அரிகிலபாடி மாநில நெடுஞ்சாலை 50பி கி.மீ 31/6ல் விருத்தசீர ஆற்றின் குறுக்கே ரூபாய் 17.65 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெயு.சந்திரகலா முன்னிலை வகித்தார் மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டத்தின் சார்பாக விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் மொத்த நீளம் 125,060 மீட்டர், ஓடுதள அகலம் 10.5 மீட்டர். அடித்தளம் அபட்மெண்ட் தாங்கு தூண்கள் 11 எண்ணிக்கை மற்றும் மேல் தளம் அமைக்கப்படுகிறது. தண்டலம் பக்கம் 40 மீட்டர், அரக்கோணம் பக்கம் 4649 மீட்டர் நீளம் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட உள்ளது. பணி ஒப்பந்த காலம் 15 மாதங்கள் ஆகும். மேம்பால பணிகளை விரைவாகவும் தரமாகவும் அமைக்க வேண்டும். அடுத்த பருவமழை காலத்திற்கு முன்னதாகவே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணியை விரைவாக மேற்கொள்ள ஒப்பந்ததாரரை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள் இந்நிகழ்ச்சியில் கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலை திட்டங்கள் சுந்தரம், தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜன், நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, தக்கோலம் பேரூராட்சி துணைத் தலைவர் கோமளா, நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் உதவி இயக்குனர் ஞானப்பிரகாசம், உதவி பொறியாளர் அசோக், ஒப்பந்ததாரர்கள் தீனதயாளன், சந்திரகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story


