மணப்பாறை அருகே கிராம ஊராட்சியை இரண்டாக பிரித்ததை ரத்து செய்ய வலியுறுத்தி 18 கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
கிராம ஊராட்சியை இரண்டாக பிரித்ததை ரத்து செய்ய வலியுறுத்தி 18 கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
கிராம ஊராட்சியை இரண்டாக பிரித்ததை ரத்து செய்ய வலியுறுத்தி 18 கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
Tiruchirappalli (East) King 24x7 |3 Jan 2026 1:13 PM ISTமணப்பாறை அருகே கிராம ஊராட்சியை இரண்டாக பிரித்ததை ரத்து செய்ய வலியுறுத்தி 18 கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது புத்தாநத்தம் ஊராட்சி. தற்போது இந்த ஊராட்சி புத்தாநத்தம் ஊராட்சி, இடையபட்டி ஊராட்சி என இரண்டாக பிரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஊராட்சியை இரண்டாக பிரிக்கக் கூடாது என்று தலைமைச் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் மக்களின் எதிர்ப்பை மீறி தற்போது பஞ்சாயத்து இரண்டாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஊராட்சியை சரி சமமாக பிரிக்காமல் ஒரு தலைப்பட்சமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஊராட்சியை இரண்டாக பிரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரு ஊராட்சி வளர்ச்சியும் மற்றொரு ஊராட்சி பின்னடைவையும் சந்திக்கும், அதேபோல் பூலோக ரீதியாகவும் பல இன்னல்களுக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் எனவும் கிராம மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோகும். அரு அறிவிக்கும் நிதிகள் 90 சதவீதம் புத்தாநத்தம் ஊசிக்கும் 10 சதவீத நிதி மட்டுமே இடைப்பட்டியை ஊராட்சி கிடைக்கும் நிலை ஏற்படும் அரசு அறிவிக்கும் சலுகையில் நடைபெற்ற ஊராட்சிக்கு 100 சதவீதம் கிடைக்க வாய்ப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும் என்பதுடன் மக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும் என்பதால் ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி அந்த பகுதியைச் சேர்ந்த 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். புத்தாநத்தம் ஊராட்சியை பிரிக்க்ககூடாது, பிரிக்க வேண்டும் என்றால் சரிசமமாக பிரிக்க வேண்டும். இல்லையெனில் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தின்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
Next Story


