கரூரில்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வினோத்குமார், மாவட்ட துணை செயலாளர் சண்முகசுந்தரம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், கல்வித்துறை சங்க மாவட்ட செயலாளர் பொன்.ஜெயராம், தமிழ்நாடு வேளாண் துறை மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள 1500 க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் மற்றும் மூன்றாண்டுக்கு மேல் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுனர், உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். ஏழு ஆண்டுகள் பணி முடித்துள்ள பணி மேற்பார்வையாளர்கள் அனைவரையும் இடைநிலை பொறியாளர் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும். பணி மேற்பார்வையாளர் நிலையிலிருந்து உதவி பொறியாளர்கள் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணியிடம் ஏற்படுத்திட வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த தொழில் நுட்ப உதவியாளர்கள், பதிவரை எழுத்தர்கள் 2013க்கு பிறகு விடுபட்ட சில்லறை செலவின பணியாளர்கள் அனைவரையும் பணி வரன்முறை செய்திட வேண்டும். 25 ஊராட்சிகளுக்கு மேற்பட்ட ஊராட்சிகளை கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாக பிரி பிரித்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story