சூறைக்காற்றில் மரம் முறிந்து விழுந்து 2 வீடுகள் சேதம். ஒருவர் காயம்

X
குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த பொன்மனை பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது வீட்டின் அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மலையோர பகுதி என்பதால் அந்த பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. அப்போது அந்தப் பகுதியில் நின்ற பழமையான மரம் பயங்கர சத்தத்துடன் முறிந்து விழுந்தது. இதில் அந்த பகுதியில் இருந்த ஒரு வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. அந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அருகில் இருந்த கருணாகரன் என்பவரது வீட்டில் மரம் முறிந்து விழுந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கருணாகரன் வீட்டின் உள்ளே இருந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மரம் முறிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த மற்ற வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி உள்ளனர். மேலும் மரம் முறிந்து விழுந்ததில் அங்கு இருந்த மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து மின்வாரியம் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story

