திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
Salem King 24x7 |11 Jan 2025 3:28 AM GMT
கலெக்டர் பிருந்தாதேவி தகவல்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை), குடியரசு தினத்தை முன்னிட்டு 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும். எனவே மாவட்டத்தில் உரிமம் பெற்ற ஓட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அரசு உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story