சேலத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

சேலத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் செவ்வாய்பேட்டை குமரன் நகரை சேர்ந்தவர் கவியரசன் (வயது 31). இவர் வெங்கடப்பன் சாலையில் உள்ள ஒரு மளிகை கடை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதேபோல் முள்ளுவாடி கேட் மக்கான் தெருவை சேர்ந்த இப்ராகீம் (27) என்பவர் சீதாராம் செட்டி ரோட்டில் உள்ள இரும்பு கடை முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து அவர்கள் 2 பேரும் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தனர். இந்த 2 புகார்கள் குறித்தும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தினார். அப்போது மோட்டார் சைக்கிள்களை திருடியது டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த சவுந்திரராஜன் (21), நடராஜ் (24) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story