சேலம் மல்லூர் அருகே மொபட் மீது லாரி மோதியதில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலி

சேலம் மல்லூர் அருகே மொபட் மீது லாரி மோதியதில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலி
X
போலீசார் விசாரணை
சேலம் எருமாபாளையம் டாக்டர் நாவலர் நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 41), கட்டிட மேஸ்திரி. இதேபோல் ஓமலூர் கஞ்சநாயக்கன்பட்டிைய சேர்ந்தவர் கோவிந்தராஜ் (57). இவர்கள் இருவரும் நேற்று வேலை காரணமாக ராசிபுரத்திற்கு சென்று விட்டு மாலை 6.30 மணியளவில் மொபட்டில் சேலம் திரும்பிக் கொண்டிருந்தனர். மொபட்டை பழனிசாமி ஓட்டி வந்தார். அப்போது அவர்கள் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மொபட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த கோவிந்தராஜை வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story