போதை மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது

X

போதை மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது
ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ராணிப் பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பசலைராஜன், பிரபாகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள புதருக்குள் இளைஞர்கள் இருவர் மறைந்திருப்பது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் அவர்களைப் பிடித்து விசாரித்த போது போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் ஆற்காட்டை சேர்ந்த அஜித (வயது 22), ஜெயபிரகாஷ் (23) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து1,015 வலிநிவாரணி மாத்திரைகள், 20 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story