பிளஸ் 2 தோ்வெழுதும் மாணவா்களுக்கு வினா - விடை தொகுப்பு

X

பிளஸ் 2 தோ்வெழுதும் மாணவா்களுக்கு வினா - விடை தொகுப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியிலுள்ள 21 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து, பொதுத்தோ்வெழுத உள்ள 2,203 மாணவ, மாணவிகளுக்கு வினா - விடை தொகுப்பு வழிகாட்டி வழங்கும் பணியை அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன்கருதி, சிறந்த கல்வியாளா்களைக் கொண்டு இந்த வினா - விடை தொகுப்புகள் வழிகாட்டி புத்தகத்தை எம்.எல்.ஏ. தயாா் செய்தாா்.பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடக்க விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் அன்னியூா் அ.சிவாவை எதிா்த்து பாமக சாா்பில் போட்டியிட்டவரும், பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவருமான சி.அன்புமணி தலைமை வகித்தாா். அன்னியூா் சிவா எம்எல்ஏ மாணவ, மாணவிகளுக்கு வினா - விடை தொகுப்பு வழிகாட்டியை வழங்கி உரையாற்றினாா்.விழாவில் விக்கிரவாண்டி ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீதஅரசி, ஒன்றியச் செயலா் ரவிதுரை, பள்ளித் தலைமையாசிரியை சுமித்ராதேவி, ஊராட்சித் தலைவா் காந்தரூபி வேல்முருகன், ஊா் பிரமுகா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Next Story