பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை - 2 பேர் கைது

X

மார்த்தாண்டம்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (48 ).இவர் மார்த்தாண்டம் சந்தை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மார்த்தாண்டம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து இன்று போலீசார் செல்வராஜன் கடையில் சோதனை நடத்தினர். மேலும் செல்வராஜன் வீட்டிலும் சோதனை நடத்திய போது அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து தினமும் பெட்டி கடைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தவர். இதற்கு உடந்தையாக விரி கோடு பகுதியைச் சேர்ந்த ஜெகன் (45) என்பவர் கேரளாவில் இருந்து சட்ட விரோதமாக புகையிலை கடத்தி வந்து செல்வராஜன் வீட்டில் பதுக்கி வைத்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து செல்வராஜ் மற்றும் ஜெகன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story