கொல்லங்கோடு அருகே கஞ்சா பொட்டலத்துடன் 2 பேர் கைது

X
குமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ மற்றும் போலீசார் நேற்று மாலை செங்கவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பதை கண்டு அருகில் சென்று அவர்கள் இரண்டு பேரையும் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் அடைக்காக் குழி பகுதி சேர்ந்த ஜித்தன் (20) மற்றும் கேரள மாநிலம் பாறசாலை பகுதி சேர்ந்த பிஜோ (21) என்பது தெரிய வந்தது. போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்து அவர்களிடம் இருந்த 10 கிராம் கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றினர்.
Next Story

