சேலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

சேலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் அன்னதானப்பட்டி போலீசார் தாதகாப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூணாங்கரடு தண்ணீர் டேங்க் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பழைய பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் (வயது 22), தாதகாப்பட்டியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story