இலுப்பூர் மது விற்ற 2 பேர் கைது

X
இலுப்பூர் போலீசார் மலைக்குடிப்பட்டியில் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலைக்குடிப்பட்டி வணிக வளாகம் அருகே மறைத்து வைத்து மது பாட்டில் களை விற்பனை செய்து கொண்டிருந்த மலைக்குடிப்பட் டியை சேர்ந்த கமலேஸ்வரன் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 60 மது பாட்டில் களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அன்னவாசல் போலீசார் உருவம்பட்டி பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு மதுவிற்ற உருவம் பட்டியை சேர்ந்த அடைக்கலம் (57) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களை பறிமு தல் செய்தனர்.
Next Story

