சேலம் கருப்பூர் அருகே 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு

X
ஓமலூர் அருகே உள்ள கோட்டை கவுண்டம்பட்டி வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 49). முன்னாள் ராணுவ வீரர். இவர் உடல்நலக்குறைவால் தனது மனைவியை அழைத்துக் கொண்டு சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்தநிலையில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் பணத்தை திருடி சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய தனபால், வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் அவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் பெரியார் பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர் ரகுநாத் (32) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளார். இந்த 2 வீடுகளிலும் தலா ரூ.5 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து தனபால் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story

