நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் பிஎல்ஏ -2 , பிடீஏ முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை பயிற்சி கூட்டம்! -கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி பங்கேற்பு

X
Namakkal King 24x7 |6 Nov 2025 9:06 PM ISTநாமக்கல் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள்(பிஎல்ஏ–-2), பாக டிஜிட்டல் முகவர்கள்(பிடீஏ) நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2) பாக டிஜிட்டல் முகவர்கள்(BDA) நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் பயிற்சிக் கூட்டம் நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி தலைமை தாங்கினார்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முனவர் ஜான், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள்(பிஎல்ஏ–-2), பாக டிஜிட்டல் முகவர்கள்(பிடீஏ) நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நாமக்கல் தொகுதியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி பேசுகையில் .. கடந்த வாரம் நகர, ஒன்றிய, மாவட்ட செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களை தமிழக முதல்வர் அழைத்து எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர். அங்கு முதல்வர் கூறியதை தற்போது வாக்குச்சாவடி முகவர்களுக்கும், பாக டிஜிட்டல் முகவர்களுக்கும் நாங்கள் தெரிவித்து வருகிறோம்.கிளை செயலாளர்களை காட்டிலும் பாக முகவர்களுக்கு கட்சி தலைமையால் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதியிலும் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் தான் பாக முகவர்களாக உள்ளனர். இவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆவர். அரசுத்துறையால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், பாக முகவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்களாவர். ஒரே வாக்காளர் பெயர் இரு வாக்குச்சாவடிகளில் இருப்பதையும், இறந்தவர்கள் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முகவர்கள் முயற்சிக்க வேண்டும். பீகாரில் தேர்தல் வருவதையொட்டி தகுதியுடையோரையும் படிவம் பூர்த்தி செய்யவில்லையெனில் அவசர, அவசரமாக 60 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது. தமிழகத்தில் அவ்வாறான சூழல் இருக்காது. இங்குள்ள வாக்காளர்கள் விவரம் அறிந்தவர்கள்.திமுக அரசின் திட்டங்கள் கிராமப்புற மக்களை சென்றடைந்துள்ளதால் அங்குள்ள வாக்காளர்கள் 50 லட்சம் பேரை நீக்கி தேர்தலில் வெற்றியை பெறுவதற்கு எதிர்கட்சிகள் திட்டமிடுகின்றன. அவ்வாறான சூழலை உருவாக்க நாம் விடக்கூடாது. தகுதியான அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார்.இந்நிகழ்வில் அவைத் தலைவர் மணிமாறன், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி,நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுஉறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பிஎல்ஏ2, பிடிஏ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
